top of page

بسم الله الرحمان الرحيم

 

ஹதீஸ்கள்

 

தொழுகை 

 

1.

 

 

عن ابن عمر رضى الله عنهما قال 

 

قال رسول الله صلى الله عليه وسلم

 

بنى الاسلام على خمس شهادة ان لااله الا الله 

 

وان محمدا رسول الله, واقام الصلاة

 

, وايتاء الزكاة , والحج, وصومرمضان

 

 

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் இஸ்லாத்தின் அடிப்படை ஐந்து தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ். (அல்லாஹு தஆலாவைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை ; முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் தஆலாவின் திருத்தூதர் ) என்று சாட்சி கூறுவது ; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவது ; ஜகாத்தை நிறைவேற்றுவது ; ஹஜ் செய்வது ; ரமலானில் நோன்பு நோற்பது என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளர்கள் 

 

 

                                                                                      (நூல்: புகாரி )

 

 2.

 

 

عن جابر بن عبد الله رضى الله عنهما قال 

 

قال النبى صلى الله عليه وسلم

 

مفتاح الجنة الصلاة ومفتح الصلاة الطهور

 

 

ஹஜ்ரத் ஜுபைர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் சுவனத்தின் திறவுகோல் தொழுகை ; தொழுகையின் திறவுகோல் உளூ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

 

                                                                   (நூல் : முஸ்னத் அஹ்மத்)

3.

 

 

 

عن انس رضى الله عنه قال 

 

 

 

 

قال رسول الله صلى الله عليه وسلم

 

 

 

 

جعل قرة عينى فى الصلاة

 

 

 

 

 

எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .

 

                                                                                               (நூல் : நஸாயீ) 

4.

 

عن عمر رضى الله عنه قال

قال رسول الله صلى الله عليه وسلم

الصلاة عمود الدين 

 

 

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : தொழுகை மார்க்கத்தின் தூண் என்று ரசூலுள்ளஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 

 

(நூல் : ஹில்யத்துல் அவ்லியா , ஜாமிஉஸ் ஸகீர்)  

 

5.

 

عن علي رضى الله عنه قال 

 كان اخر كلام رسول الله صلى الله عليه وسلم  

الصلاة الصلاة , اتقو الله فيما ملكت ايمانكم

 

 

தொழுகை ! தொழுகை ! என்றும் உங்களின் அடிமைகள் உங்களது கண்காணிப்பில் உள்ளவர்கள் சம்பந்தமாகவும் அல்லாஹு தஆலாவை அஞ்சிக் கொள்ளுங்கள். (அதாவது அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுங்கள்) என்றும் நபி (ஸல்) அவர்களின் இறுதி உபதேசம் இருந்தது என்று ஹஜ்ரத் அலி (ரலி) அறிவிக்கிறார்கள் . 

 

                                                                             (நூல் : அபூ தாவூத்)

 

6.

 

 

عن ابى امامة رضى الله عنه 

ان النبى صلى الله عليه وسلم

اقبل من خيبر, ومعه غلامان, فقال على 

يا رسول ! اخدمنا , قال خذ ايهما شئت, قال

خرلى قال خذ هذا ولا تضربه, فانى قد رايته

يصلى مقفلنا من خيبر, وانى قد نهيت عن

ضرب اهل الصلاوة

 

ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கைபரிலிருந்து திரும்பி வந்தார்கள். அவர்களுடன் இரண்டு அடிமைகளும் இருந்தனர். ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குப் பணிவிடை செய்வதற்காக ஓர் அடிமையைக் கொடுங்கள் என்று கேட்க, இவ்விருவரில் யாரை விரும்புஹிரீர்களோ அவரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், தங்களோ தேர்தெடுத்துக் கொடுங்கள் என்று அலி (ரலி) அவர்கள் வேண்டிக்கொள்ள நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரில் ஒருவரைச் சுட்டிக்காட்டி, இவரை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் இவரை அடிக்காதீர்கள். ஏனென்றால் கைபரிலிருந்து திரும்பி வரும்போது இவரைத் தொழக் கூடியவராகப் பார்த்தேன் ; தொழக் கூடியவர்களை அடிப்பது எனக்குத் தடுக்கப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .

 

                     (நூல் : முஸ்னத் அஹ்மத், தப்ரானீ, மஜ்ம உஜ்ஜவாயித்)

 

7.

 

عن عبادة بن الصامت رضى الله عنه قال

سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

خمس صلوات إفترضهن الله عز وجل, من احسن

وضوءهن وصلاهن لوقتهن واتم ركوعهن وخسوعهن

كان له على الله عهد ان يغفر له, ومن لم يفعل فليس

له على الله عهد, ان شاء غفر له وان شاء عذبه

 

 

நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம்  கேட்டதாக ஹஜ்ரத் உபாதத் இப்னு ஸாமித் (ரலி) அறிவிக்கிறார்கள் அல்லாஹுதஆலா ஐந்து வேளைத் தொழுகைகளை விதியாக்கியுள்ளான், யார் அத்தொழுகைகளுக்காக நல்லமுறையில் உளூச் செய்து, அந்தத் தொழுகைகளை (முஸ்தஹப்பான) நேரத்தில் தொழுது ருகூஉ (ஸஜ்தா) வை அமைதியாகச் செய்து, உள்ளச்சத்துடன் தொழுகிறாரோ,அவரை அல்லாஹுதஆலா அவசியம் மன்னிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளான் . யார் அந்தத் தொழுகைகளை அவற்றிற்குரிய நேரங்களில் நிறைவேற்றாமல் உள்ளச்சமின்றித் தொழுதாரோ, அவருக்கு மன்னிப்பிருப்பதாக எந்த வாக்குறுதியும் இல்லை, அவன் விரும்பினால் மன்னிக்கலாம் ; அவன் நாடினால் வேதனை செய்யலாம்

 

                                                                             (நூல் : அபூ தாவூத்)

8.

 

عن حظلة الاسيدى رضى الله عنه قال

ان رسول الله صلى الله عليه وسلم قال 

من حافظ على الصلوات الخمس على وضوءها 

ومواقيته وركوعها وسجودها يراها حقا لله عليه 

حرم على النار

 

ஹஜ்ரத் ஹன்ளலா உஸைதிய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உளுவைச் செய்தும், தொழுகையின் நேரங்களைப் பேணியும், ருகூஉ ஸுஜுதுகளைச் சரியான முறையில் நிறைவேற்றியும், இவ்வாறு தொழுவதை அல்லாஹுதஆலா என்மீது பொருப்பாக்கியுள்ளான். என்று கருதியும் யார் தொழுவரோ, அவருக்கு நரக நெருப்பு ஹராமாக்கப்படும் என்று ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

       

                                                                   (நூல் : முஸ்னத் அஹ்மத்)

 

9.

 

عن ابى قتاة بن ربعى رضى الله عنه قال

قال رسول الله صلى الله عليه وسلم قال الله

عز وجل: انى فرضت على امتك خمس صلوات

وعهدت عندى عهد, انه من جاء يحافظ عليهن لوقتهن

ادخلته الجنة, ومن لم يحافظ عليهن فلا عهد له عندى

 

ஹஜ்ரத் அபூகதாதா இப்னு ரிப்இய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (நபியே!) நான் உமது சமுதாயத்தின் மீது ஐந்து வேலைத் தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளேன், மேலும் எவர் ஐந்து நேரத் தொழுகைகளையும் அவற்றிற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் பேணுதலாக இருப்பாரோ, அவரை நான் சுவனத்தில் நுழைய பொறுப்பேற்றுள்ளேன். யார் தொழுகைகளில் பேணுதலாக இல்லையோ, அவருக்கு என்னிடம் எந்தப் பொறுப்பும் இல்லை. (நாடினால் மன்னிப்பேன்: நாடினால் தண்டிப்பேன்) என்று அல்லாஹுதஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .

​                                              

                                                                 (நூல் ; அபூ தாவூத்)

 

10.

 

عن عثمان بن عفان رضى الله عنه

 ان رسول الله صلى الله عليه وسلم قال 

من علم ان الصلاة حق واجب

دخل الخنة حق مكتوب واجب

 

ஹஜ்ரத் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்; யார் தொழுவதை அவசியம் எனக் கருதுகிறாரோ, அவர் சுவர்க்கத்தில் நுழைவார் என ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் 

 

                                 (நூல்; முஸ்னத் அஹ்மத்,அபூ யஃலா,பஜ்ஜார், மஜ்மஉஜ்ஜவாயித்)

 

                                       

11.

 

عن عبد الله بن قرط رضى الله عنه قال

 قال رسول الله صلى الله عليه وسلم اول 

ما يحاسب به العبد يوم القيامة الصلاة فان

صلحت صلح سائر عمله, وان فسدت فسد

سائر عمله

 

 

 

bottom of page